குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர்! - damage
சேலம்: குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடுவதால், குழாயை சரிசெய்ய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஒடும் அவலம்
சேலம் சாரதா கல்லூரி அருகே குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சேலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனை உடனே சரிசெய்யுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Jun 28, 2019, 11:14 AM IST