சேலம் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகினி வெளியிட்டார். தொடர்ந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
அஞ்சல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அலுவலர் ரோகினி! - வாக்காளர் பட்டியல்
சேலம்: தேர்தல் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகினி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 15 ஆயிரத்து 787 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சேலத்தில் 11 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை தேர்தல் அலுவலக பணியாளர்கள் முகவர்கள் முன்னிலையில் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் போதுமானது, அரசின் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.