தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2022, 10:08 AM IST

ETV Bharat / state

சுமார் 35 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் மரணம்

உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் இன்று மரணம் அடைந்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் மரணம்
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் மரணம்

சேலம்: சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த 1987ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ‌இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கர்நாடக போலீஸாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தியமங்கலம் கொலை வழக்கு தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. மொத்தமாக சுமார் 35 ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாதையனுக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 15 நாட்கள் பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசின் விதிமுறைப்படி அவரின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாதையன் உடலை ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் தயாரித்த சாத்தான் பாய்ஸ் கைது!

ABOUT THE AUTHOR

...view details