சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா(23). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சுகன்யாவை அவரின் கணவர் பாலாஜியும் அவரின் உறவினர்களும் வரதட்சணை கேட்டும் சாதி ரிதீயாகவும் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பு ஏத்தாப்பூர் வந்த சுகன்யா, தனது பெற்றோரிடம் நிலைமையை எடுத்துக்கூறி அழுதுள்ளார். அதற்கு ஆறுதல் கூறிய அவரது பெற்றோர், நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஆறுதலில் சமாதானம் அடையாத சுகன்யா, மனம் வேதனையடைந்து ஏத்தாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்தது. ஆனால், அது தொடர்பான அறிக்கை இன்னும் சேலம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அளிக்கப்படவில்லை என்று சுகன்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பட்டியிலினப் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டுப் பெண்ணின் பெற்றோர்கள் மனு சுகன்யாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் செய்த சாதி ரிதீயிலான கொடுமையால் தான், சுகன்யா தற்கொலை செய்துகொண்டார் என்று கூறும் அவரது பெற்றோர் பாலாஜி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?