தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் இடஒதுக்கீட்டில் பழனிசாமியிடம் ஏமாந்துவிட்டார் ராமதாஸ்- வேல்முருகன்!

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு அரசு அளித்துள்ள 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்து விட்டார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Vanniyar reservation: Ramdas betrayed Palanisamy
Vanniyar reservation: Ramdas betrayed Palanisamy

By

Published : Mar 1, 2021, 11:55 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் 'தமிழக வேலை தமிழருக்கே' என்ற உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர்.

மாநாட்டிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், "வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மூன்றாவது முறை அதிமுக வெற்றி பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாடு மூலம் தெரிவிக்கிறேன், கண்டிப்பாக மூன்றாவது முறை அதிமுக வெற்றி பெறாது. அதிமுகவால் ஆட்சி அமைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸை ஏமாற்றலாம். என்னை ஏமாற்ற முடியாது.

40 ஆண்டுகள் வன்னியர்களுக்காக போராடுகின்ற மருத்துவர் ராமதாஸை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு பெற்று தந்திருந்தால், இந்த நிமிடமே சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கலைத்து விடுகிறேன்" என ஆவேசமாகக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details