தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகத்தரத்திற்கு மாறும் சேலம் ரயில் நிலையம்..! ரூ.45 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்! - Indian Railways development work

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தில், சேலம் ரயில் நிலையத்தில் ரூ.45 கோடியில் மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 7, 2023, 9:20 AM IST

சேலம்: அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தில் நாடு முழுவதிலும் 508 ரயில் நிலையங்களில் ரூ.25,000 கோடியில் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 06) கானொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரூ.125 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

சேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பி.சிவலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர். இரா.அருள், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசுகையில், "அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் ரயில் நிலையம் ரூ.45 கோடியிலும், கரூர் ரயில் நிலையம் ரூ.34 கோடியிலும், திருப்பூரில் ரூ.22 கோடியிலும் மற்றும் போத்தனூர் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடியிலும் என மொத்தம் ரூ.125 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டங்களின் கீழ் ரயில் நிலையங்களின் முகப்புப் பகுதி மேம்படுத்தப்படும். ரயில் நிலையங்களில் உள்ள பயணியர் வசதிகள், நுழைவுப் பகுதி, காத்திருப்போர் அறை, பயணச்சீட்டு அலுவலகம், கழிவறைகள் என அனைத்திலும் தரம் உயர்த்தப்படும். மேலெம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. முதற்கட்ட பணிகள் அடுத்த 6 மாத காலத்தில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டும் இல்லாமல், சேலம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவுவாயில் பகுதி மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. சேலம் ரயில் நிலையத்தில் பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசுகையில், "நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை உலகத்தரத்தில் உயர்த்திடும் வகையில் ரூ.25,000 கோடியில் மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

உலகத்தரத்திற்கு ரயில்வே துறையை உருவாக்கிய பெருமை பிரதமரையே சாரும். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் மூலம் சேலம் ரயில் நிலையத்தில் 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதில் தற்போது முதற்கட்டமாகச் சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மேம்பாட்டுப் பணிகளின் மூலம் சேலம் ரயில் நிலையம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு கத்தி குத்து - போதை ஆசாமி கைது!

ABOUT THE AUTHOR

...view details