சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியராக பணிபுரிபவர் சிவராசு. இவர் நேற்று (செப்.2) சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் மீண்டும் திருச்சி நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நாமக்கல்லிலிருந்து சேலத்திற்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
மினிலாரி மீது மோதிய கார்
பின்னர் மினிலாரி அங்கிருந்த தடுப்பு சுவர் மீது மோதி மாவட்ட ஆட்சியரின் கார் வந்து கொண்டிருந்த எதிர்திசை சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.