சேலத்தில் எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெங்களூரு புகழேந்தி கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘டிடிவி தினகரன் கடந்த இரண்டு மாத காலமாக காணாமல் போய்விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. டிடிவியின் அரசியல் முடிந்துபோன அரசியல். அதிமுகவையும், ஆட்சியையும் ஒன்றும் செய்ய முடியாது. திமுகவின் அரசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. ஒன்று லண்டன் வழக்கு. அதில் குற்றம்சாட்டப்பட்டவர் டிடிவி.
இன்னொன்று முன்னாள் முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. இதில், டிடிவி தினகரன் திமுகவிடம் மண்றாடி லண்டன் வழக்கை வாபஸ் பெறச்செய்தார். அதன்பின்னர் திமுகவும் டிடிவி தினகரனும் சேரந்துதான் சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தினர்.