தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி! - Fire Department training for Salem school students

சேலம்: கோடை காலத்தில் வனப்பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய நேரடி தடுப்பு பயிற்சிகளை தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்களுக்கு இன்று (ஏப். 8) தீயணைப்புத் துறை வீரர்கள் பயிற்சி அளித்தனர்.

கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி
கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி

By

Published : Apr 8, 2021, 4:46 PM IST

சேலம், மரவனேரி தனியார் பள்ளியில் இன்று (ஏப். 8) மாவட்ட வனத்துறை, தீயணைப்புப் படையினர் சார்பில், கோடை கால தீ விபத்துக்களை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, தடுக்க வேண்டிய விழிப்புணர்வு பயிற்சிகள், சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் வேலு, வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு துறை அலுவலர் வேலு,

"சேலம் வனப்பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அதை அணைத்து சேதங்களைத் தவிர்க்க தீயணைப்புத் துறையும், வனத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இன்று (ஏப். 8) தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்களுக்கு குடியிருப்புப் பகுதிகளில் எதிர்பாராத வகையில் தீவிபத்து ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்தி அணைக்க தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்கள், எங்களுடன் இணைந்து தீ விபத்துக்களை தடுக்க உதவும் வகையில், அவர்களுக்கு தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

எங்கே தீவிபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அந்த எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைத்து சேதங்கள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அடிவாரத்திலேயே முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புகை பிடிக்க அனுமதி இல்லை. அதுபோல அத்துமீறி புகைப்பிடித்தால், அவர்களை கண்காணித்து வெளியேற்றி விடுகிறோம் " என்றார்.

ABOUT THE AUTHOR

...view details