இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திவருகிறார்.
சேலத்தில் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு - குடிநீர் விநியோகத் திட்டம்
சேலம்: மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்திவருகிறார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறையில் நடக்கும் அதிமுக கட்சி பிரமுகர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்கிறார், அதன் பிறகு மதுரைக்கு கார் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய ஆட்சியர் அலுவலக கட்டடங்களையும் திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு