தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் 4 இடங்களில் மோடி பரப்புரை செய்கிறார்' - முதலமைச்சர் தகவல்! - முதலமைச்சர்

சேலம்: "அதிமுக கூட்டணி கட்சிகளுக்காக தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை செய்கிறார்" என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நான்கு இடங்களில் மோடி பிரசாரம் மேற்கொள்வார்

By

Published : Mar 20, 2019, 5:11 PM IST


சேலம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் பாரத பிரதமர் மோடி, நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை செய்கிறார். தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் பெரிய அளவில் வெற்றி பெறுவதாக நினைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். குழந்தையே இல்லாமல் பெயர் வைத்துக் கொண்டிருப்பது போல தினகரன் இருக்கிறார். முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். தினகரன் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details