சேலம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.
இதனையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. இதனையறிந்து சென்னையிலிருந்து சேலம் சென்ற முதலமைச்சர் தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து, அவரது தாயாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மயானத்தில் காலை 9:30 மணியளவில் எரியூட்டப்பட்டது. முதலமைச்சரின் அண்ணன், தாயாரின் உடலை எரியூட்டினார்.
சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம்! மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்து பழனிசாமியின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க...முதலமைச்சர் தாயார் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்