தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வு முடிவு எதிரொலி - கல்வி ஆலோசனை மையத்தை அழைக்கும் மாணவர்கள் - EDUCATION COUNSELING

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிக் கல்வித் துறை தகவல் மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர்.

கல்வித் தகவல் ஆலோசனை

By

Published : Apr 19, 2019, 3:03 PM IST

மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டுதல் வழங்கவும், வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது.

கல்வித் தகவல் ஆலோசனை மையம்


இந்த மையத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வழக்கத்தை விட அதிக அளவிலான மாணவர்களும் பெற்றோர்களும் உயர் படிப்பு குறித்து ஆலோசனை பெறுகின்றனர்.

தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளராமல் இருக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து உளவியல் ஆலோசகர் சல்மா கூறும்போது, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து உயர் படிப்பு குறித்து மாணவர்கள் அதிக அளவில் ஆலோசனை கேட்கின்றனர்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை பெறுகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் அலோசனை கூறி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. வழக்கத்தைவிட இன்று அதிக அளவில் மாணவர்களும் பெற்றோர்களும் தொலைபேசியில் அழைத்து ஆலோசனை பெறுகின்றனர் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details