தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள் - சூரமங்கலம் காவல் நிலையம் அருகில் நகை பறிப்பு

சேலம்: காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

slm
slm

By

Published : Jan 30, 2020, 1:30 PM IST

சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில், சூரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு அருகிலேயே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியிடம் திருடர்கள் நகையை பறித்த இடம்

இதையும் படிங்க: 7 வீடுகளில் யாரும் இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

ABOUT THE AUTHOR

...view details