தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு! - Theft of three houses at midnight in Salem

சேலம்: நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்ததுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Theft of three houses in Salem
Theft of three houses in Salem

By

Published : Dec 2, 2019, 2:21 PM IST

சேலம் மாவட்டம் அருகே அன்னதானபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு மணியும், அவரது குடும்பத்தினரும் காற்றுக்காக வீட்டின் உள்கதவை தாழிடாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருடர்கள் மாடி வழியே வீட்டுக்குள் இறங்கி பீரோவில் வைத்திருந்த ரொக்கம் 40 ஆயிரம் ரூபாயும், செல்போன் ஒன்றையும் திருடிச் சென்றனர்.

இதே போல், அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரம் செய்து வரும் சாந்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் 15 ஆயிரத்தையும் , உமா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து டிவிடி பிளேயரையும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளை நடந்த வீடுகள்

அதனைத் தொடர்ந்து, இந்த திருட்டில் துப்பு துலங்க அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு நடந்தது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details