17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இருவரின் வெற்றியும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் வெற்றியை மொட்டை அடித்து பிரியாணி போட்டு கொண்டாடிய தொண்டர் - thirumavalavan
சேலம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றிருப்பதை மொட்டை அடித்து, தொண்டர்களுக்கு பிரியாணி போட்டு விசிக நிர்வாகிகள் கொண்டாடினர்.
இந்த வெற்றியை தமிழ்நாட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாநகர வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ராமன் தலைமையில் இன்று 1000 பேருக்கு கறி விருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விசிக சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் சசிகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதந்திரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் ராமன் திருமாவளவன் வெற்றியை மொட்டையடித்து கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.