சேலம் உருக்காலை , மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடகவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆலைகளையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உருக்காலை தனியார்மயமாவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் - hunger strike
சேலம்: உருக்காலை தனியார்மயமாக்குவதை கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்
சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தொழிலாளர்கள் 17ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.