சேலம் டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகவேலு-அழகு சுசீலா தம்பதி. இவர்களின் இளைய மகன் வசியன் தனது சகோதரனுடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்ததை அவர்களது பெற்றோர் கவனித்து தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் சிறுவன் வசியன் தனது அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்ததை ஆர்வமாக தனது தந்தையிடம் பகிர்ந்து கொள்கிறான்.
உண்டியல் சேமிப்பை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன் - வீடியோ வைரல் - corona releif fund
தமிழ்நாடு அரசு சார்பில் திரட்டப்படும் கரோனா பேரிடர் கால நிவாரண நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பை வழங்கி ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க விருப்பம் தெரிவிக்கும் சேலத்தைச் சேர்ந்த சிறுவனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், கரோனா பாதித்த மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகம் இருப்பதால் மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே தனது உண்டியல் சேமிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக உற்சாகத்தோடு தெரிவித்தான். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மேலும் சிறுவன் வசியனின் சகோதரன் கவின் பூபதி ’ஆண்தேவதை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.