சேலம்:அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கணித ஆசிரியர் சரவணகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா தீவிர விசாரணை மேற்கொண்டார்.