அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கி எதிரில் பாலன் என்பவர் கடந்த 20 வருடங்களாக தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை அடைத்துச் சென்றார். இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தேநீர் கடையில் சிலிண்டர் கசிந்து தீ விபத்து! - Salem district Police
சேலம்: அம்மாபேட்டை பகுதியில் நேற்றிரவு (மார்ச் 2) தேநீர் கடை ஒன்றில் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர், காவல் துறையினர்
இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கடைக்குள் இருந்த நான்கு சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.
எனினும் கடையின் மேற்கூரை, பொருள்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. அடுத்தடுத்து குடியிருப்புகள், கடைகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் துரிதமாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்தத் தீ விபத்துக் குறித்து காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Mar 3, 2021, 12:05 PM IST