இது தொடர்பாக எம்பி சதாசிவம் நமக்குஅளித்த பிரத்யேக பேட்டியில், "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதிக்கு முன்பாக தமிழ்நாடு மேக்னசைட் சுரங்கம் திறந்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பிருந்தா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக சேலம் வந்து மேக்னசைட் சுரங்கம் திறப்பதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும். 'செயில் ரெப்ரேக்டரி' கம்பெனி சுரங்கமும் 45 மாதங்களாக மூடி கிடக்கிறது. தமிழ்நாடு அரசு தொழிலாளர்களிடம் எழுத்துப்பூர்வமான ஒரு வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கு எப்படி இருக்கிறதோ, அதன்படி நடந்துகொள்வது என வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நிர்வாகத்தில் இருக்கக்கூடிய இப்போதைய தலைமை அலுவலர்கள் அந்தப் பணியை கடந்த 7 மாதங்களாக செய்யாத காரணத்தினால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு மாறாக 'செயில்' அலுவலர்கள் மேக்னசைட் தாதுப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். அப்படி இறக்குமதி செய்வதில் அவர்களுக்கு ஏதோ பலன் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவர்கள் சுரங்க அனுமதி பெறுவதில் காலதாமதம் செய்கிறார்கள் என்று பாட்டாளி தொழிற்சங்கம் அய்யப்படுகிறது.
காலவரையற்ற போராட்டம் நடைபெறும் அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் காலவரையற்றப் போராட்டத்தை 'செயில் ரெப்ரேக்டரி' வளாகத்தில் தொழிலாளர்களைக் கொண்டு நடத்த தீர்மானித்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:7 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே திரையரங்குகள் செல்ல விருப்பம் - ஆய்வில் தகவல்