தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோட்டல் தமிழ்நாடு விடுதிகள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் மதிவேந்தன் - tamil nadu hotels

ஹோட்டல் தமிழ்நாடு விடுதிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

minister-mathiventhan
minister mathiventhan

By

Published : Jun 12, 2021, 10:56 PM IST

சேலம்: ராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடு விடுதி மற்றும் உணவகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று (ஜூன்.12) ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுற்றுலாத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் உள்ளபடி, தமிழ்நாட்டிலும் சுற்றுலாத்தலங்களை நவீன முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகங்களின் தரத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‌.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கோடை விழா நடத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’என்றார்.

இதையும் படிங்க: கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details