தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் இல்லையென முதல்வர் அறிவிப்பு-பாமக உற்சாக வரவேற்பு - மக்கள் விரோத திட்டங்கள்

சேலம் : தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் இடமில்லை என்று கூறிய முதல்வரின் கருத்துக்கு பாமகவினர் உற்சாக வரவேற்பு.

tamil-nadu-has-no-place-for-any-project-affecting-farmers-chief-minister-palanisamy
tamil-nadu-has-no-place-for-any-project-affecting-farmers-chief-minister-palanisamytamil-nadu-has-no-place-for-any-project-affecting-farmers-chief-minister-palanisamy

By

Published : Feb 10, 2020, 9:20 AM IST

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றும் தஞ்சை தரணி என்றும் பாராட்டு பெற்ற காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்துவந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசுகையில் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என்று கூறினார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முதல்வரின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி தலைமையில் அக்கட்சியினர் கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி, விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து. தமிழகத்தில் இது போன்ற மக்கள் விரோத திட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

tamil-nadu-has-no-place-for-any-project-affecting-farmers-chief-minister-palanisamy

எங்களுக்கு மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முதல்வரின் இந்த அறிவிப்பு அறிவிப்போடு நிறுத்தாமல் உடனடியாக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க :வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய்; ரசிகர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details