தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு தோல்வி எதிரொலி - எடப்பாடி அருகே மாணவர் தற்கொலை! - நீட் தேர்வு தோல்வி

சேலம்: மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாணவர் தற்கொலை

By

Published : Jun 15, 2019, 11:48 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெல்லாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த மாணவன் பாரதபிரியன் என்பவர் 12ஆம் வகுப்பில் 425 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மருத்துவப் படிப்பு பயில்வதற்காக நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் போதிய மதிப்பெண் எடுக்காததால் மருத்துவப் படிப்பில் அவர் சேர முடியவில்லை. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட மாணவர் பாரதபிரியன், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியில் சென்ற மாணவரின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதபிரியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவனின் இறப்பு குறித்து வெளியில் சொல்லாமல் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், தகவலறிந்த எடப்பாடி காவல் துறையினர் பாரதபிரியனின் வீட்டிற்கு சென்று மாணவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details