தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 2:10 PM IST

ETV Bharat / state

சேலத்தில் 45 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம்கள்!

சேலம் : மாநகர் முழுவதும் 45 இடங்களில் இன்று (செப்.3) கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை முகாம்கள்
கரோனா பரிசோதனை முகாம்கள்

சேலம் மாநகரில் இன்று (செப்.3) கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்:

சூரமங்கலம் மண்டலம்:

ஸ்டேட் பேங்க் காலனி, காமராஜ் நகர், கபிலர் தெரு, சின்னேரி வயல்காடு, பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, சுந்தரம் காலனி, சையத் ஜாபர் தெரு, கிரிஸ்டியன் பேட்டை, சின்னப்பன் தெரு.

அஸ்தம்பட்டி மண்டலம்:

கான்வென்ட் சாலை பிரியங்கா காலனி, டி.வி.எஸ்.காலனி, காமாட்சி நகர், ராஜா நகர், பிரபு நகர், கலைவாணர் தெரு, சங்கர் நகர், பிரட்ஸ் ரோடு, மெய்யனூர் ராம் நகர், ஸ்வர்ணபுரி.

அம்மாபேட்டை மண்டலம்:

அல்லிக்குட்டை மாரியம்மன் கோயில் தெரு, வாய்க்கால்பட்டறை காந்தி நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி, அண்ணா நகர் நான்காவது கிராஸ், தாண்டவன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பெண்டம் ராமசாமி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, முராரி வரதய்யர் தெரு, அண்ணா நகர், வ.உ.சி நகர், ராஜா கவுண்டர் காடு, பெருமன் தெரு, கடம்பூர் முனியப்பன் கோயில் தெரு.

நடமாடும் வாகனங்கள் மூலமாக கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் -கொண்டலாம்பட்டி மண்டலம்:

இட்டேரி சாலை, குஞ்சு மாரியம்மன் கோயில் தெரு, வள்ளுவர் நகர், சீரங்கன் தெரு 4 மற்றும் 5, அம்மாள் ஏரி ரோடு மூன்றாவது கிராஸ், வடக்கு முனியப்பன் கோயில், கொத்தடிமை காலனி, செல்லக்குட்டி காடு, பராசக்தி நகர்.

மாநகரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்கள், இந்தச் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சேலம் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 804ஆக குறைவு!

ABOUT THE AUTHOR

...view details