தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடையை தூய்மை செய்ய ரோபோக்கள் வேண்டும் - தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை! - தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

சேலம்: தமிழ்நாடு முழுவதும் பாதாள சாக்கடையில் இறங்கி தூய்மை பணி செய்ய, ரோபோக்களை பயன்படுத்த வேண்டுமென்று என்று தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sewage workers demands
தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

By

Published : Feb 7, 2021, 2:53 PM IST

தூய்மைப் பணியாளர்களுக்கென தனி வாரியம் அமைத்திட வேண்டும் , தினக்கூலி பணியாளர்களை பணி நியமனம் செய்திட வேண்டும் என்று சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் மற்றும் பாரத பிரதமரின் கிராம மேம்பாட்டு திட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் வலியுறுத்தி உள்ளார்.

சேலம் மாநகராட்சி தினக்கூலி தூய்மைப் பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஆதிதிராவிட நல குழு உறுப்பினர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்," தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

பாதாள சாக்கடையில் இறங்கி மனிதர்கள் பணியாற்றுவதற்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்த வேண்டும், இதுமட்டுமில்லாமல் கரோனா தொற்றுக் காலங்களில் பணியாற்றி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பங்களை கௌரவிக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு இவர்களுக்கு தனி வாரியம் அமைத்திட வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஊரை அடித்து உலையில் போட்டவர் சசிகலா - அமைச்சர் சி.வி. சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details