கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஏப். 25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக வணிக வளாகங்கள், இறைச்சிக் கடைகள், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வழக்கத்தைவிட குறைவாகவே காணப்பட்டனர்.
முழு ஊரடங்கு: வெறிச்சோடி கிடக்கும் சேலம் மாநகரம்! ரயில் நிலையங்கள் வழக்கம்போல் இயங்கலாம் என அனுமதி அளித்திருந்த நிலையில், சில ரயில் சேவைகள் மக்கள் போக்குவரத்துக்காகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகக் காணப்பட்டது. மாநகர, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை, இதனால் சேலம் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல சேலம் ஐந்து சாலைப் பகுதியிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
முழு ஊரடங்கு: வெறிச்சோடி கிடக்கும் சேலம் மாநகரம்! சேலம் உழவர் சந்தை திறந்திருந்த நிலையில் காய்கறி வாங்க மக்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை, மேலும் சேலம் மீன் சந்தை மூடப்பட்டுள்ளது, இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் பொதுமக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அத்தியாவசிய தேவைக்காக இன்றி வெளியே வரும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல்செய்யப்படும்.
இதையும் படிங்க: கோவாக்சின் விலை என்ன தெரியுமா?