சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், மல்லூர் பகுதியில் வாகன சோதனையில் இன்று (மார்ச் 8) மாலை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே வந்த பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் காரில் வந்துள்ளார். அவரின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனையிட்டனர்.
சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி 1.34 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்தப் பணத்தைப் பறிமுதல்செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து பறிமுதல்செய்யப்பட்ட பணத்தைப் பறக்கும் படையினர் சேலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்தில் 1.34 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் - Salem Police
சேலம்: வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்று (மார்ச் 8) மாலை 1.34 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டு சேலம் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் தேர்தல் பறக்கும் படை