சேலம் மாவட்டம் பனங்காடு அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 250க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியின் 5ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ஒருவர் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவிகள் கழிவறையில் இருக்கும் பகுதிக்கு சென்று எட்டி பார்த்ததாகவும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.