ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனைக் காலம் முடிந்த நிலையில், இன்று (ஜனவரி 27) விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலையானதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சசிகலா விடுதலை:சேலத்தில் அமமுகவினர் கொண்டாட்டம்! - சசிகலா விடுதலை
சேலம்:சசிகலா விடுதலையானதையடுத்து சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Sasikala
அந்த வகையில் சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திருவாக்கவுண்டனூர், வீரபாண்டி, சேலம் அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அமமுக அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில், 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்த தொண்டர்கள், அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள அம்மா மணிமண்டபத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.