தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் போக்குவரத்து பணிமனை வரிபாக்கி - குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி முடிவு!

சேலம்: சேலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையினர் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1

By

Published : Feb 6, 2019, 9:43 PM IST

சேலம் எருமாபாளையத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.40 லட்சம் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து பலமுறை பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்தும் வரி நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பணிமனைக்குள் புகுந்து குடிநீர் இணைப்பை துண்டிக்க முயற்சித்தனர். அப்போது பணிமனை ஊழியர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ஜெயராஜ் கூறுகையில், " தற்போது சேலம் மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனை சரிக்கட்ட நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதனையடுத்து 40 லட்ச ரூபாய் வரி பாக்கியை செலுத்தவேண்டும் என்று கூறி பணிமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அவர்கள் உடனே செலுத்த முன்வராததால் வேறுவழியின்றி குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வந்தோம். ஆனால் பத்து லட்சம் ரூபாயை மட்டும் முதல் தவணையாக கட்டுவதாக தெரிவித்து, அதற்கான காசோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம்", என்றார்.

வரிபாக்கி செலுத்தாததால் அரசு பணிமனை குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டிக்க வந்ததால் எருமாபாளையம் பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details