கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
இந்நிலையில் இன்று (ஏப். 20) முதல் தமிழ்நாட்டின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்காடு பகுதியிலுள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன.