கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பணிபுரிந்துவந்த ராஜா என்ற ஊழியர், சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர் படுகொலை: பணியாளர்கள் போராட்டம்! - Krishnakiri tasmac worker
சேலம்: அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இன்று சேலம் அடுத்த சந்தியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மொத்த விற்பனை கிடங்கின் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் படுகொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.