சேலம் மண்டலத்திலுள்ள எட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நேற்று காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
நேற்று தொடங்கிய இந்தப் போட்டி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பினை சேலம் ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு போட்டியினைத் தொடங்கிவைத்தார்.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டு போட்டி ஆரம்பம் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், வாலிபால் உள்ளிட்ட எட்டு பிரிவுப் போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தய விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு ஆட்சியர் ராமன் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க:ஆரோவில்லில் 20ஆவது குதிரையேற்றப் போட்டி: நாளை முதல் மார்ச் 1 வரை...