தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர் - சேலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - rain update news

சேலம்: இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் புறநகர் பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதித்துள்ளது.

Salem

By

Published : Oct 22, 2019, 1:53 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் புறநகர், மாநகர் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

அழகாபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுத்துள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஆறு போல ஓடிவருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறன்றனர்.

கனமழையால் சேலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நகரைச் சுற்றி சென்று வருகின்றனர். தொடர்மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details