தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவியேற்பு - salem local body election news

சேலம்: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

ஓமலூர்
ஓமலூர்

By

Published : Jan 11, 2020, 4:07 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு சாந்தி, கண்ணன், விஜயா, ராஜாகவுண்டர், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, பதிவான வாக்குப் பெட்டி, கருவூலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான 3,059 வாக்குகளில், 1,717 வாக்குகளைப் பெற்று கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட கண்ணன் வெற்றிபெற்றார்.

வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு விழா

அதன்பின், நேற்று வெள்ளக்கல் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கண்ணன், உதவி தேர்தல் அலுவலர் உமாமகேஸ்வரி முன்னிலையில் கையெழுத்திட்டு ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்யபாமா தேர்வு

ABOUT THE AUTHOR

...view details