சேலம் மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த செந்தில்குமார், சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சென்னை தலைமை நிர்வாகப்பிரிவு ஐஜியாகப் பதவி வகித்து வந்த சந்தோஷ்குமார், சேலம் மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
சேலத்தில் புதிய எஸ்பி சந்தோஷ்குமார் பதவியேற்பு! - சேலம் மாவட்ட புதிய காவல் ஆணையர்
சேலம்: மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் இன்று (பிப்.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.
commissioner
இதைத் தொடர்ந்து அவர், சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (பிப்.19) காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை ஆணையாளர்கள் செந்தில், சந்திரசேகர், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!