தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் புதிய ஆட்சியர் நியமனம்! - சேலம் செய்திகள்

சேலம்: மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கார்மேகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் புதிய ஆட்சியர் நியமணம்
சேலத்தில் புதிய ஆட்சியர் நியமணம்

By

Published : May 18, 2021, 7:12 AM IST

தமிழ்நாடு தலைமை செயலர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், "மதுரை மாவட்ட ஆட்சியராக எஸ்.அணிஸ் சேகர், திருச்சி மாவட்ட ஆட்சியராக சிவராசு, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக எஸ். திவ்யதர்ஷினி, சேலம் மாவட்ட ஆட்சியராக எஸ். கார்மேகம், கடலூர் மாவட்ட ஆட்சியராக கே. பாலசுப்பிரமணியம்" ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.கார்மேகம் முன்னதாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை இணை செயலாளராக பணியாற்றி வந்தார். கரோனா தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் அரசு விரைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், பல்வேறு புகார்களுக்குள்ளான சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் நேற்று (மே 17) திருப்பூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல, திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வரும் மருத்துவர் வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக நேற்று (மே 17) இடமாற்றம் செய்யப்பட்டு அரசு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: குடும்ப உறுப்பினருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மதுரை ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details