சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த ரோகிணி, சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று வேலூர் மாவட்ட ஆட்சியராக பனியாற்றி வந்த எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
சேலத்தின் 172 ஆவது ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் பதவியேற்பு - எஸ்.ஏ. ராமன்
சேலம்: சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம்த்தின் 172 ஆவது ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் பதவியேற்பு
இதையொட்டி சேலம் மாவட்டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர், குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள், மாற்று திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.