சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதில், ஏவிஆர் ரவுண்டானா, திருவாக் கவுண்டனூர் ரவுண்டானா, இரும்பாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ. 125 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பயன்பாட்டிற்கு வர தயராகும் சேலம் 'இரட்டை அடுக்கு பாலம்'!
சேலம்: ஐந்து ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் பகுதியில் உள்ள நான்கு ரோட்டிலும், ஐந்து ரோடு பகுதியிலும் பிரமாண்டமான புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாலம் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இரட்டை அடுக்கு மேம்பாலமாக உருவாக்கப்பட்டுவருகிறது.
இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இரண்டொரு நாட்களில் ஐந்து ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.