சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வில்வனூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் மூன்று பெரிய கேன்களில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டுநர் காமராஜரிடம் விசாரித்தபோது, விழுப்புரம் மாவட்டம் சேத்தூரிலிருந்து கள்ளச் சாராயத்தை விற்பனைச் செய்வதற்காக வாங்கி வந்ததாகவும் அதில் அதிகளவு போதை வருவதற்காக ஊமத்தங்காயின் சாற்றினைக் கலந்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.