தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2021, 9:10 PM IST

ETV Bharat / state

அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் பாமக எம்.எல்.ஏ - 'லைட், கேமரா,ஆக்‌ஷன்' சொன்ன ஆதரவாளர்கள்!

ஏற்காடில் பிளாஸ்டிக்குகளை அகற்றும் பணியை சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் செய்யும்போது, செய்த சில விஷயங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன.

’லைட்,கேமரா,அக்‌ஷன்..!’ : ஏற்காடில் பிளாஸ்டிக் அகற்றும் பணியில் எம் எல் ஏ கோஷ்டிகள் கூச்சலில் நகைப்பு
’லைட்,கேமரா,அக்‌ஷன்..!’ : ஏற்காடில் பிளாஸ்டிக் அகற்றும் பணியில் எம் எல் ஏ கோஷ்டிகள் கூச்சலில் நகைப்பு

சேலம்: ஏற்காடு சுற்றுலாத்தலத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், ஏற்காடு மலைப்பாதை ஓரங்களில் சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவில் குவிந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து ஏற்காடு மலைப்பாதை மற்றும் வனப்பகுதியை தூய்மைப்படுத்தும் முயற்சியாக இன்று பள்ளி மாணவர்கள் மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பினர் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றும் பணியைச் செய்தனர்.

'லைட், கேமரா,ஆக்‌ஷன்' எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்!

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கலந்துகொண்டு இளைஞர்களுடன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை செய்வதுபோல் செய்தார்.

அப்போது, அவர் புகைப்படக்காரர்கள் மற்றும் காணொலிப்பதிவர்களுக்கு முன்பு நின்றுகொண்டு சினிமாவில் நடிப்பதுபோல், குப்பை வண்டியை ஓட்ட முயற்சிப்பதுபோல் நின்று போஸ் கொடுத்தார். வண்டியை ஓட்டும்முயற்சியிலும் தோற்றார்.

அப்போது அங்கு குழுமியிருந்த எம்.எல்.ஏ அருளின் ஆதரவாளர்கள் 'லைட்,கேமரா,ஆக்‌ஷன்..!' என்று அவரை நடிக்கவைக்க முயற்சித்தனர். இது பாமகவின் உண்மைத் தொண்டர்கள் மத்தியிலேயே எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது.

இதேபோல் சில நாட்கள் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை மழை வெள்ளத்தில் முழங்கால் அளவு நீரில் படகில் சென்று காணொலி மற்றும் புகைப்படங்கள் எடுத்தது பலராலும் விமர்சிக்கப்பட்டது.

’லைட்,கேமரா,அக்‌ஷன்..!’ : ஏற்காடில் பிளாஸ்டிக் அகற்றும் பணியில் எம் எல் ஏ கோஷ்டிகள் கூச்சலில் நகைப்பு

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்தப் பணியைச் செய்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்குவோம் என எம்எல்ஏ அருளின் ஆதரவாளர்கள் கூறினர்.

போட்டோஷீட் நடத்தாமல், சரியாக இந்தப் பணிகளை செய்தால் கட்சிக்கும், ஏற்காட்டிற்கும் நல்லது என அங்கிருந்த பாமக நிர்வாகிகள் கூறினர்.

இதையும் படிங்க:கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து - ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details