மத்திய அரசின் தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். கொளுத்தும் வெயிலிலும் மாணவ-மாணவியர், ஆணையத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மருதுவக் கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டம்! - college
சேலம்: தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர் போராட்டதில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாணவர்கள் பேசுகையில், " ஏழை எளிய மக்களுக்கும் சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் மருத்துவக் கல்வியில் நிலவும் மதச்சார்பின்மைக்கு எதிரான தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக்கூடாது.
இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது. மாநில உரிமைகளைப் பறிக்கும் நெக்ஸ்ட் (next) தேர்வை திணிக்கக்கூடாது. மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரத்தைக் கெடுக்கும் வகையில் நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதவர்கள் நவீன அறிவியல் மருத்துவ முறையில் சிகிச்சை வழங்க உரிமம் வழங்ககூடாது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் வணிக மையமாக மத்திய அரசு முயற்சிக்கக்கூடாது என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.