சேலம்:சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திராயன் 3 படைத்தது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த சந்திராயன் 3 வெற்றிகரமாக தரை இறங்கியதற்கு முக்கிய காரணம் சேலத்தில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள் என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் சோனா கல்லூரியின் பேராசிரியருமான கண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி கண்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ”சந்திரயான்-3 விண்ணில் செலுத்துவதற்கு ஏவுகணை வாகனம் மார்க்-III (எல்விஎம் 3) இல் பயன்படுத்த கல்லூரியின் 'சோனாஸ்பீடு' SonaSpeed (Sona special power electronics and electrical drive) என்பது சோனா கல்லூரியால் 2003இல் நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவாகும். இந்த 'சோனாஸ்பீடு' குழுவால் தயாரிக்கப்பட்ட ஸ்டெப்பர் மோட்டாரை இஸ்ரோ எடுத்துள்ளது.
சோனாஸ்பீடு என்பது விண்வெளிக்கு பயணம் செய்ய, சந்திரயான்-3 ஏவுகணை வாகனமான எல்விஎம் 3, கடந்த வாரம் சந்திரயான்-3 உடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. SonaSpeed இன் சிம்ப்ளக்ஸ் இயந்திரம் ராக்கெட்டில் திரவ எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவை விகிதத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சந்திரயான் - 3 விண்கலத்தை தூக்கி பூமியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்திய LVM-3 ராக்கெட்டில் அதன் பயன்பாட்டிற்காக சிம்ப்ளக்ஸ் இயந்திரம் உருவாக்கும் பொறுப்பை சோனா கல்லூரி இளம் குழுவிடம் ஒப்படைத்தது.