சேலம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர், குருபாதம். இவர், பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக அங்கம் வகித்தவர்.
இவரின் மகள் சகுந்தலா தேவசுந்தரம்(100). கோயம்புத்தூரில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்த இவர் தனது 100 ஆவது பிறந்தநாளை சேலத்தில் தனது மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி மற்றும் கொள்ளுப்பேத்தியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
தனது 100ஆவது வயதிலும் கூட யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே சமைத்து சாப்பிட்டு, அவரது தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்கிறார் என்கின்றனர், அவரின் உறவினர்கள்.
அன்றே டிகிரி முடித்த சகுந்தலா பாட்டி
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவரது தந்தை சகுந்தலாவை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என்று நெகிழ்கின்றனர், சகுந்தலாவின் வாரிசுகள்.
அவர்கள் மேலும் கூறுகையில், "கணிதத்தில் பட்டம் பெற்ற சகுந்தலா, டெல்லியில் உள்ள பிரபல பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.