சேலம்: தமிழர்களின் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் கோட்டை பகுதியில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கு பெற்ற தமிழர் பாரம்பரிய கலை போட்டி நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய போர் கலைகள்...அசத்திய சேலம் மாணவர்கள் - traditional folk arts of Tamils
சேலத்தில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய போர் கலைகள் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் அசத்திய சேலம் மாணவர்கள்
இதில் வாள் வீச்சு, இரட்டை மான் கொம்பு, சுருள்வாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட 24 வகையான தமிழர்களின் பாரம்பரிய போர்க் கலைகள் பிரிவில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முக்கியமாக போர்க்களத்தில் வீரர்கள் சண்டையிட்டு கீழே மடிவதுபோல் மாணவ மாணவிகள் தத்ரூபமாக சண்டைக் காட்சிகளை நடித்து காண்பித்தது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
இதையும் படிங்க:இந்து என்பது மதம் அல்ல நாடு; சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னனே - ஹெச்.ராஜா