தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Yercaud: மே மூன்றாவது வாரத்தில் ஏற்காடு மலர் கண்காட்சி துவக்கம்! - சேலம்

46-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இம்மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

Salem District Collector said the 46th Yercaud Summer Festival and Flower exhibition is planned to be held from the May third week
46வது ஏற்காடு மலர் கண்காட்சி மே மூன்றாவது வாரம் முதல் துவக்கம்

By

Published : May 11, 2023, 2:19 PM IST

சேலம்: 46-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், “46 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் ஏற்காடு கோடை விழாவைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது. மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.மேலும் இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் பாரபட்சம்? - அதிகாரிகள் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details