சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுமண தம்பதியர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆடி முதல் நாளில் தேங்காயை சுடும் வினோத திருவிழா! - ஆடி திருவிழா
சேலம்: ஆடி மாத பண்டிகையை வரவேற்கும் வகையில் ஆடி மாத முதல் நாளன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேங்காய்
சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இந்தத் தேங்காய் சுடும் பண்டிகை காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேங்காயின் உள்ளே வெல்லம் , அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை அடைத்து அதை அழிஞ்சி மர குச்சியில் நுழைத்து, நெருப்பில் சுட்டு அந்தத் தேங்காயை உடைத்து விநாயகருக்கு படையலிட்டு பக்தர்கள் ஆடி பண்டிகையை கொண்டாடினர்.