சேலம் மாநகர காவல் துறை சார்பில் காவல் துறையினர் ஃபீட் பேக், இ-சேவையில் புகார் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இதில் இரண்டு குறும்படங்களை மாநகர காவல் துறை ஆணையாளர் செந்தில்குமார் வெளியிட சென்னை சிபிசிஐடி காவல்துறைத் தலைவர் சங்கர் பெற்றுக்கொண்டார்.
அப்போது குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமார், "நடப்பாண்டில் இ-சேவை மூலமாக மட்டும் 23ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து குறைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இ-சேவை புகார் மனுக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது குறித்து காவல் துறையின் ஃபீட்பேக் செயலி மூலம் அறிந்து கொள்ள முடிவதால், தமிழ் நாடு முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ் நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளார். இந்தத் திட்டத்தினால் சேலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் காவல் துறையில் பெறப்படும் மக்களின் புகார் குறித்து முழுமையான அளவுக்கு நிவர்த்தி செய்ய முடியவில்லை" எனவும் ஆதங்கமாகத் தெரிவித்தார்.
சேலம் காவல் துறையின் குறும்பட வெளியீட்டு விழா இதையும் படியுங்க:
‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’ - சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்!