சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, அயோத்தியாபட்டணம் அருகே வலப்புறமாக திரும்ப முற்பட்டபோது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரிப் பேருந்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஐந்திற்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தனியார் கல்லூரி, அரசு பேருந்து மோதி விபத்து இந்த விபத்தால் அயோத்தியாபட்டணம் புறவழிச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அந்த விபத்து சம்பவம் பதிவானது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் தனியார் பேருந்து மோதி கார் விபத்து! - 5 பேர் படுகாயம்